உலகம்

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட குழப்பம்: சிறையில் இருந்து தப்பிய 216 கைதிகள்

Published On 2025-06-03 15:24 IST   |   Update On 2025-06-03 15:24:00 IST
  • பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • கராச்சி சிறையில் இருந்து 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றனர்.

கராச்சி:

பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கராச்சியில் உள்ள மாலிர் சிறையில் குழப்பம் ஏற்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 1000க்கும் மேற்பட்ட கைதிகள் பிரதான வாயிலுக்கு அழைத்து வரப்பட்டனர்.

அப்போது கைதிகளில் ஒரு குழுவினர் திடீரென கதவைத் திறந்துகொண்டு தப்பிச்சென்றனர். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களுக்கும், கைதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் கைதி ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 3 சிறைத்துறை அதிகாரிகள், ஒரு காவலர் படுகாயம் அடைந்தனர்.

விசாரணையில், 216 கைதிகள் தப்பிச் சென்றது தெரியவந்தது. அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் சுமார் 80 கைதிகளை சிறைபிடித்தனர். தப்பியோடிய கைதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சிந்து மாகாண அதிகாரிகள் கூறுகையில், நிலநடுக்கத்தால் சிறையின் சுவரில் விரிசல் ஏற்பட்டது. சிறையின் பிரதான வாயிலை உடைத்துக்கொண்டு தப்பினர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது என தெரிவித்தனர்.

Similar News