உலகம்

நைஜீரியாவில் சோகம்: பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி வெடித்து 39 பேர் பலி

Published On 2025-10-23 00:10 IST   |   Update On 2025-10-23 00:10:00 IST
  • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
  • பெட்ரோல் கசிந்து வெளியேறியபோது ஏற்பட்ட தீ விபத்தில் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியது.

அபுஜா:

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டின் லகோஸ் மாகாணத்தில் இருந்து நைஜர் மாகாணத்திற்கு டேங்கர் லாரியில் நேற்று பெட்ரோல் கொண்டு செல்லப்பட்டது.

நைஜர் மாகாணத்தின் கட்சா பகுதியில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

இதனால் டேங்கர் லாரியில் இருந்த பெட்ரோல் கசிந்து வெளியேறியது. அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியது.

இந்த சம்பவத்தில் சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள், வாகனங்களில் பயணித்தவர்கள் என 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 60 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News