உலகம்

Microsoft-ல் தொடரும் ஊழியர்கள் பணிநீக்கம்

Published On 2025-06-03 12:24 IST   |   Update On 2025-06-03 12:24:00 IST
  • கடந்த மாதம் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
  • இம்மாதமும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, AI-ஐ பயன்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் தேவையற்ற நிர்வாக ஊழியர்களை குறைத்து புதிய தொழில்நுட்பத்தின் நன்மைகளைப் பயன்படுத்திக் கொள்வதாக கூறி கடந்த மாதம் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 1985 பேர் வாஷிங்டனை சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில், நேற்று 300-க்கும் மேற்பட்ட ஊழியர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

மாற்றமடைந்து வரும் சந்தையில் வெற்றி பெற நிறுவனத்தை சிறப்பாக நிலைநிறுத்த தேவையான மாற்றங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக கடந்த மாதம் மைக்ரோசாப்ட் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து இம்மாதமும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிலவரப்படி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சுமார் 2,28,000 முழுநேர ஊழியர்கள் இருந்தனர். அவர்களில் 55% பேர் அமெரிக்காவில் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News