வங்கதேசத்தில் இந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர், படம்பிடித்து வெளியிட்ட 4 பேர் கைது
- சிலர் பாதிக்கப்பட்ட பெண்ணை உதவியற்ற நிலையில் படம்பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.
- பாதிக்கப்பட்ட பெண் தனது மரியாதையைப் பாதுகாக்க வேண்டும் என்று கெஞ்சுவதை வீடியோவில் பதிவானது.
வங்கதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோமில்லா மாவட்டத்தில் முராத்நகரில் உள்ள ராமச்சந்திரபூர் பஞ்சகிட்டா கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை இந்த சம்பவம் நடந்தது.
காவல்துறையினரின் கூற்றுப்படி, அதே கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான அலி, பாதிக்கப்பட்ட வீட்டில் தனியாக இருந்தபோது வந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர் கிராம மக்கள் அலியை பிடிக்க முயன்றனர். இருப்பினும், அவர் அவர்களிடமிருந்து தப்பி ஓடிவிட்டார். சம்பவத்தின் போது அங்கிருந்தசிலர் பாதிக்கப்பட்ட பெண்ணை உதவியற்ற நிலையில் படம்பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.
இந்த வீடியோ சில நிமிடங்களில் வைரலானது. பாதிக்கப்பட்ட பெண் தனது மரியாதையைப் பாதுகாக்க வேண்டும் என்று கெஞ்சுவதை வீடியோவில் பதிவானது.
இந்த சம்பவம் தொடர்பாக முராத்நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், முக்கிய குற்றவாளியான அலி மற்றும் வீடியோவைப் பதிவு செய்து பரப்பிய நான்கு பேரைக் கைது செய்தனர். குற்றத்தில் ஈடுபட அலி வங்காளதேச தேசியவாத கட்சியை சேர்ந்தவர் ஆவார்.
இந்த சம்பவம் வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து மீண்டும் கவலைகளை எழுப்பியுள்ளது.