உலகம்

ஷின்சோ அபே

முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மரணம் - தலைவர்கள் இரங்கல்

Published On 2022-07-08 16:13 GMT   |   Update On 2022-07-08 16:13 GMT
  • ஷின்சோ அபே மறைவுக்கு திபெத்திய தலைவர் தலாய் லாமா இரங்கல் தெரிவித்தார்.
  • காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்துறை மந்திரி அமித் ஷா உள்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

டோக்கியோ:

ஜப்பானில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:

இதுதொடர்பாக ஜப்பான் பிரதமர் பியுமியா கிஷிடா கூறுகையில், ஷின்சோ அபேவை காப்பாற்ற டாக்டர்கள் செய்த முயற்சி பலனளிக்கவில்லை. அவர்மீது நடந்த தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. இந்த வன்முறை சம்பவம் காட்டுமிராண்டிதனமான செயல். ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மரணம் அடைந்தது கடும் வேதனை அளிக்கிறது. இந்தியா, ஜப்பான் இடையேயான உறவை வலுப்படுத்துவதில் ஷின்சோ அபேவின் பங்கு அளப்பரியது. இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் மிகப்பெரிய பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறார். ஜப்பான் மக்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

எனது நண்பர் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மரணம் குறித்த செய்தி அதிர்ச்சியாக உள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஷின்சோ அபே மறைவுக்கு திபெத்திய தலைவர் தலாய் லாமா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்துறை மந்திரி அமித் ஷா உள்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

Tags:    

Similar News