உலகம்

ஜோ பைடன்    போரிஸ் ஜான்சன்

இங்கிலாந்துடனான உறவு வலுவாக உள்ளது- போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்த நிலையில், ஜோ பைடன் உறுதி

Published On 2022-07-07 22:18 GMT   |   Update On 2022-07-07 22:18 GMT
  • பிரிட்டனும், அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள்.
  • பல்வேறு விவகாரங்களில் அமெரிக்காவும் பிரிட்டனும் தொடர்ந்து இணைந்து செயல்படும்.

வாஷிங்டன்:

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில், அமைச்சர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அவரது அமைச்சரவையில் இருந்து வெளியேறினர். இதனால் பெரும்பான்மை ஆதரவை இழந்ததால் போரிஸ் ஜான்சன், பதவியை ராஜினாமா செய்தார். கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும்வரை போரிஸ் ஜான்சன் பிரதமராக நீடிப்பார் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரிட்டன் அரசுடன் தொடர்ந்து நெருக்கமான ஒத்துழைப்பை வழங்க ஆவலுடன் இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா அறிவித்துள்ளது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட ஜோ பைடன், பிரிட்டனும், அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் நட்பு நாடுகள் என்றார்.

எங்களுக்கு இடையிலான சிறப்பான உறவு வலுவாக நீடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் மக்களுக்கான ஆதரவு, உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அமெரிக்காவும் பிரிட்டனும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்றும் ஜோ பைடன் கூறியுள்ளார்.

Tags:    

Similar News