உலகம்

ஜெர்மனியில் யூத வழிபாட்டு தலத்தின் மீது திடீர் தாக்குதல்

Published On 2023-10-19 04:27 GMT   |   Update On 2023-10-19 04:27 GMT
  • மர்மநபர்கள் சிலர் நள்ளிரவில் வழிபாட்டு தலத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர்
  • வழிபாட்டு தலத்தை சுற்றி வசித்து வருபவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

பெர்லின்:

ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகர் மையத்தில் யூத வழிபாட்டு தலம் ஒன்று உள்ளது. புகழ்பெற்ற இந்த வழிப்பாட்டு தலம் சார்பில் பள்ளி- கல்லூரிகள், தங்கும் விடுதிகள் ஆகியவை அங்கு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மர்மநபர்கள் சிலர் நள்ளிரவில் இந்த வழிபாட்டு தலத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர். பின்னர் அவர்கள் வெடிக்கும் தன்மை உடைய வேதிப்பொருட்களை வீசிவிட்டு தப்பியோடினர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆலயத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் தப்பியோடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் காரணமாக வழிபாட்டு தலத்தை சுற்றி வசித்து வருபவர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்தநிலையில் ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளார். 

Tags:    

Similar News