இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் இந்திய பயணம் ரத்து எனத் தகவல்
- இந்த வருடம் இறுதியில் இந்தியா வர திட்டமிட்டிருந்தார்.
- டெல்லி குண்டு வெடிப்பால் பாதுகாப்பு கவலை தெரிவித்து பயணத்தை ரத்து செய்துள்ளதாக தகவல்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீண்டும் ஒருமுறை இந்திய பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருட இறுதியில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டிருந்தார். டெல்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்குப் பிறகு, பாதுகாப்பு கவலை காரணமாக பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேதன்யாகு கடந்த 2018-ம் ஆண்டு இந்தியா வந்திருந்தார். பாதுகாப்பு மதிப்பீடு நிலுவையில் உள்ள நிலையில் அடுத்த வருடம் தொடக்கத்தில் வரும் வகையில் புதிய தேதியை கோருவார் எனத் தெரிகிறது.
நேதன்யாகு இந்தியா வரும் திட்டத்தை ரத்து செய்வது இது 3-வது முறையாகும். கடந்த செப்டம்பர் 9-ந்தேதி இந்தியா வருவதாக இருந்தது. ஆனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் செப்டம்பர் 17-ந்தேதி மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டதால் இந்திய பயணத்தை ரத்து செய்தார். அதற்கு முன் கடந்த ஏப்ரல் மாதமும் தேர்தல் காரணமாக இந்திய பயணத்தை ரத்து செய்திருந்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றிருந்தார். இஸ்ரேல் சென்ற முதல் இந்திய பிரதம்ர மோடி ஆவார்.