உலகம்

தேர்தலில் வெற்றி பெற்ற மோடிக்கு வாழ்த்து இல்லை: காரணம் இதுதான் என்கிறார் பாகிஸ்தான் அதிகாரி

Published On 2024-06-08 13:26 IST   |   Update On 2024-06-08 13:26:00 IST
  • இந்திய மக்களுக்கு அவர்களுடைய தலைமையை தேர்ந்தெடுப்பதற்கான உரிமை உள்ளது
  • அவர்களுடைய தேர்தல் செயல்முறையில் எங்களிடம் எந்த கருத்துகளும் கிடையாது.

இந்தியாவில் நடைபெற்ற பாராளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. கூட்டணி தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை அவர் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

அவருக்கு வெளிநாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மாலத்தீவு அதிபர், வங்காளதேச பிரதமர், இலங்கை பிரதமர் உள்ளிட்டோர் பதவி ஏற்ப விழாவில் கலந்த கொள்ள இருக்கிறார்கள்.

ஆனால், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் இந்தியாவுடன் எதிரும் புதிருமாக இருந்தாலும் கூட பரஸ்பர வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை.

இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாகளர் கூறுகையில் "பாகிஸ்தான் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நல்லுறவு மற்றும் கூட்டுறவை விரும்புகிறது. அண்டை நாடுகளுடன் இருக்கும் பிரச்சனையை பேச்சவார்த்தை மூலும் தீர்க்க விரும்புகிறது" என்றார்.

மேலும், இந்திய பொதுத்தேர்தலில் மோடி வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததா? எனக் கேட்ட கேள்விக்கு செய்தி தொடர்பாளர் பலூச் "இந்திய மக்களுக்கு அவர்களுடைய தலைமையை தேர்ந்தெடுப்பதற்கான உரிமை உள்ளது. அவர்களுடைய தேர்தல் செயல்முறையில் எங்களிடம் எந்த கருத்துகளும் கிடையாது. இன்னும் அதிகாரப்பூர்வமாக ஆட்சி அமைக்கப்படாத நிலையில், இந்திய பிரதமருக்கு வாழ்த்து கூறுவது பற்றி பேசுவது முன்னதாக எடுக்கப்பட்ட செயலாகும்." என்றார்.

இந்திய வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்து ஜெய்சங்கர் இந்த வருட தொடக்கத்தில் "பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை கதவை இந்தியா ஒருபோதும் மூடவில்லை. பயங்கரவாத பேச்சுவார்த்தையின் மையப்புள்ளியாக இருக்க வேண்டும்" என்றார்.

Tags:    

Similar News