உலகம்

'தி ஹார்வர்டு லா ரிவ்யூ' பத்திரிகையின் தலைவராக இந்திய வம்சாவளி பெண் தேர்வு

Published On 2023-02-08 03:14 GMT   |   Update On 2023-02-08 03:14 GMT
  • பழமையான மற்றும் மதிப்புமிக்க ‘தி ஹார்வர்டு லா ரிவ்யூ’ பத்திரிகையின் தலைவராக முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • அப்சரா ஐயர், சர்வதேச மனித உரிமைகள் மையம் மற்றும் தெற்காசிய சட்ட மாணவர்கள் கூட்டமைப்பின் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் ஹார்வர்டு சட்டப்பள்ளியில் பயிலும் மாணவர்களால் நடத்தப்படும் பத்திரிகை 'தி ஹார்வர்டு லா ரிவ்யூ'.

1887-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த இதழ் தற்போது 137-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இந்த நிலையில் பழமையான மற்றும் மதிப்புமிக்க 'தி ஹார்வர்டு லா ரிவ்யூ' பத்திரிகையின் தலைவராக முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஹார்வர்டு சட்டப்பள்ளியின் 2-ம் ஆண்டு மாணவியான அப்சரா ஐயர், 'தி ஹார்வர்டு லா ரிவ்யூ' பத்திரிகையின் 137-வது தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

2016-ம் ஆண்டு பொருளாதாரம், கணிதம் மற்றும் ஸ்பானிஷ் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்ற அப்சரா ஐயர், 2018-ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட்டின் கிளாரெண்டன் ஆராய்ச்சியளராக இணைந்து, பழங்குடியின மற்றும் தொல்லியல் ரீதியான சட்ட மீறல்கள் குறித்த ஆராய்ச்சியில், ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றார்.

2020-ம் ஆண்டு ஹார்வர்டு சட்டப்பள்ளியில் சேர்ந்த அப்சரா ஐயர், சர்வதேச மனித உரிமைகள் மையம் மற்றும் தெற்காசிய சட்ட மாணவர்கள் கூட்டமைப்பின் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

Tags:    

Similar News