உலகம்

சர்வதேச கடல்சார் அமைப்புக்கு இந்தியா மீண்டும் தேர்வு

Published On 2025-11-29 03:16 IST   |   Update On 2025-11-29 03:16:00 IST
  • சர்வதேச கடல்சார் அமைப்பின் நிர்வாகக் கூட்டம் நடைபெற்றது.
  • மொத்தமுள்ள 169 வாக்குகளில் 154 வாக்குகள் இந்தியாவுக்கு கிடைத்தது.

லண்டன்:

சர்வதேச கடல்சார் அமைப்பு (ஐ.எம்.ஓ) கடல்சார் தொழிலை ஒழுங்குபடுத்தும் முன்னணி அதிகார அமைப்பாகும். இது உலகளாவிய கடல்சார் வர்த்தகம், போக்குவரத்து மற்றும் அனைத்து கடல்சார் நடவடிக்கைகளையும் மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

இந்நிலையில், சர்வதேச கடல்சார் அமைப்பின் நிர்வாகக் கூட்டம் லண்டனில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது சர்வதேச கடல்சார் அமைப்பின் (ஐ.எம்.ஓ) கவுன்சிலுக்கு இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது. மொத்தமுள்ள 169 வாக்குகளில் 154 வாக்குகள் இந்தியாவுக்கு ஆதரவாகக் கிடைத்தது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகளாவிய கடல்சார் களத்தில் தொடர்ந்து சேவை செய்வதற்காக, இந்தியாவிற்கான சர்வதேச கடல்சார் அமைப்பில் சர்வதேச சமூகத்தின் பெரிய அளவிலான ஆதரவை இந்தியா பெற்றுள்ளது என தெரிவித்தது.

Tags:    

Similar News