உலகம்

நெருக்கடி காலத்தில் எங்களின் மிகப்பெரிய நண்பன் இந்தியா: தினேஷ் குணவர்தன பாராட்டு

Published On 2023-02-09 09:01 IST   |   Update On 2023-02-09 09:01:00 IST
  • இலங்கைக்கு இந்தியா மிகப்பெரிய அளவில் உதவி வருகிறது.
  • இந்திய முதலீடுகளின் பயனால் இலங்கையில் விளைந்துள்ள வளர்ச்சியையும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு :

வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கைக்கு இந்தியா மிகப்பெரிய அளவில் உதவி வருகிறது. மேலும் சர்வதேச நிதியத்திடம் இருந்து இலங்கை கடன் பெறுவதற்காக, கடன் உத்தரவாத கடிதமும் வழங்கி இருக்கிறது. இந்தியாவின் உதவியால் பொருளாதார நெருக்கடியில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் இலங்கை, இந்த உதவிக்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து உள்ளது.

கொழும்புவில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய தினேஷ் குணவர்தனேவும் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில், 'நெருக்கடி காலத்தில் இலங்கையின் மிகப்பெரிய நண்பனாக இந்தியா இருக்கிறது' என்று தெரிவித்தார்.

மேலும், தங்கள் நாட்டில் முதலீடு செய்ய வருமாறு இந்திய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த அவர், இந்திய முதலீடுகளின் பயனால் இலங்கையில் விளைந்துள்ள வளர்ச்சியையும் சுட்டிக்காட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்திய தூதர் கோபால் பாக்லே, 'பிரதமர் மோடியின் அண்டை நாடுகளை நோக்கிய கொள்கையின் கீழ், இந்தியாவிற்கு உள்ளேயும், வெளியேயும் குறிப்பாக அண்டை நாடுகளுக்கு நன்மை பயக்கும் உறவுகளை உருவாக்க இந்திய அரசும், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன' என தெரிவித்தார்.

Tags:    

Similar News