உலகம்

நேபாளம் தேர்தல்

நேபாளத்தில் நவம்பர் 20ம் தேதி பொது தேர்தல்

Published On 2022-08-04 18:00 GMT   |   Update On 2022-08-04 18:00 GMT
  • நேபாளத்தில் வரும் நவம்பர் 20-ம் தேதி பொது தேர்தல் நடத்தப்பட உள்ளது.
  • இதற்கான ஒப்புதலை நேபாள அரசு வழங்கியுள்ளது.

காத்மண்டு:

நேபாளத்தில் பொது தேர்தல் நடத்துவதற்கான தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.

தேர்தலின்போது, நாடு முழுவதுமுள்ள வாக்காளர்கள் பாராளுமன்றத்தின் மத்திய மற்றும் மாகாண சட்டசபைக்கான தங்களது பிரதிநிதிகளை வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள்

இந்நிலையில், நேபாள நாட்டில் வரும் நவம்பர் மாதம் 20-ம் தேதி பொது தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த நாட்களுக்கு பதிலாக 2 நாட்கள் கழித்து தேர்தல் நடத்துவதற்கான நாட்களை அரசு அறிவித்துள்ளது.

தலைமை தேர்தல் ஆணையாளர் தினேஷ் குமார் தபலியா செய்தியாளர்களிடம் கூறுகையில், தேர்தல் தேதி மாற்றத்தினால் தேர்தலுக்கு தயாராவதில் எவ்வித பிரச்சனையும் இல்லை. அவை பிரதிநிதிகள் மற்றும் மாகாண சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் இறுதியிலேயே நிறைவடைய உள்ளது. நாங்கள் தேர்தல் அட்டவணையை விரைவில் வரைவு செய்து அவற்றை வெளியிடுவோம் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News