உலகம்
அமெரிக்கா முழுவதும் விமான சேவை பாதிப்பு- அனைத்து விமானங்களும் தரையிறக்கம்
- சர்வரில் ஏற்பட்ட கோளாறுகளை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- நாடு முழுவதும் விமான சேவை முடங்கியதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
வாஷிங்டன்:
அமெரிக்கா முழுவதும் இன்று விமான சேவை திடீரென முடங்கியது. விமானங்கள் அனைத்தும் அவசரமாக ஆங்காங்கே தரையிறக்கப்பட்டன. முன்னெப்போதும் இல்லாத வகையில் விமான போக்குவரத்து துறையின் சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானங்களை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. சர்வரில் ஏற்பட்ட கோளாறுகளை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விமான சேவை முடங்கியதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். என்ன நடக்கிறது என்று தெரியாமல் பல விமான நிலையங்களில் பயணிகள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.