ஜப்பானில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை
- மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
- நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
ஜப்பானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள ஹோக்கைடோ, அமோரி, இவாட் ஆகிய மாகாணங்களில் கடந்த 8-ந்தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் சுனாமி அலைகளும் தாக்கின.
இந்த நிலையில் ஜப்பானின் வடகிழக்கில் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் தீவான ஹோன்ஷு வின் வடக்கே உள்ள அமோரி மாகாணத்தின் கிழக்கு கடற்கரையில் நிலநடுக்கம் உண்டானது.
இது ரிக்டர் அளவில் 6.7-ஆக பதிவானது 20 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பசிபிக் கடற்கரையான ஹொக்கைடோ, அமோரி, இவாட் மற்றும் மியாகி மாகாணங்களில் 3.2 அடி வரை சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
அடுத்தடுத்து ஏற்பட்டு உள்ள நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக அந்நாட்டு பிரதமர் சனே டகாய்ச்சி தெரிவித்துள்ளார்.