உலகம்

"கருநாகம்" பாஜக-வுக்கு தாவிய தலைவரை சாடிய துஷ்யந்த் சவுதாலா தாயார்

Published On 2024-09-16 11:52 IST   |   Update On 2024-09-16 11:52:00 IST
  • ஜனநாயக் ஜனத கட்சியில் முக்கிய தலைவராக இருந்தவர் அனூக் தனக்.
  • பாஜக-அரசில் அங்கம் வகித்தபோது மந்திரியாக இருந்தார்.

அரியானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் பாஜக-வுக்கு இடையில் நேரடி போட்டி என்றாலும், மாநில கட்சியான துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சி (JJP) செல்வாக்கு பெற்ற கட்சியாகும்.

அரியானாவில் ஜேஜேபி ஆதரவுடன்தான் முதலில் பாஜக ஆட்சி அமைத்திருந்தது. மக்களவை தேர்தலின்போது இந்த கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

கூட்டணி ஆட்சியின்போது துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வராக இருந்தார். அந்த கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த அனூப் தனக் மந்திரியாக இருந்தார்.

தற்போதைய தேர்தலையொட்டு ஜேஜேபி கட்சியில் இருந்து அனூப் தனக் விலகி, பாஜக-வில் இணைந்துள்ளார். இந்த ஜேஜேபி கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில்தான் துஷ்யந்த் சவுதாலாவின் தாயார் நைனா சவுதாலா, அனூப் தனக் கருநாகம் என விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக நைனா சவுதாலா கூறுகையில் "நாங்கள் அனூப் தனக்கிற்கு மரியாதை கொடுத்தும். ஆனால், அவரைவிட இரண்டு முகங்கள் கொண்டு பாம்பு சிறந்தது. குறைந்த பட்சம் ஒரு பாம்பு எந்த வழியில் கடிக்கும் என்பது தெரியும். அனூப் தனக்கிற்கு கடவுள் கருநாகம் முகத்தை கொடுத்துள்ளார்.

Similar News