null
சீனா அச்சுறுத்தல்: சொந்த மண்ணில் முதல் ஏவுகணை சோதனை நடத்திய ஜப்பான்
- டைப்-88 குறுகிய தூர தரையிலிருந்து கப்பல் வரையிலான ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது.
- அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் தங்கள் ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது.
ஜப்பான் தனது முதல் ஏவுகணை சோதனையை அதன் மண்ணில் நடத்தியுள்ளதாக ஜப்பானிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த சோதனை நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ஹொக்கைடோ தீவில் நடத்தப்பட்டது. டைப்-88 குறுகிய தூர தரையிலிருந்து கப்பல் வரையிலான ஏவுகணை (Tyne-88 surface-to-shin short range missile) சோதனை செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் சீனாவில் போர் கப்பல் ஜப்பான் அருகில் உள்ள கடற்பரப்பில் காணப்பட்டதாக ஜப்பன் கவலை தெரிவித்திருந்தது. எனவே அதிகரித்து வரும் சீன அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் ஜப்பான் தனது பாதுகாப்புத் திறன்களை அதிகரித்து வருகிறது.
புதிய ஏவுகணை சோதனை வெற்றிகரமாக இருந்ததா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
ஜப்பான் இதற்கு முன்பு அதன் நட்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் தங்கள் ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. தங்கள் சொந்த மண்ணில் ஜப்பான் ஏவுகணை சோதனை நடத்துவது இதுவே முதல் முறை ஆகும்.