உலகம்

வர்த்தகப் போர் எதிரொலி-டிரம்புடன் விரைவில் பேச்சுவார்த்தை: கனடா பிரதமர்

Published On 2025-03-28 02:58 IST   |   Update On 2025-03-28 03:08:00 IST
  • அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றார் டிரம்ப்.
  • அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள புதிய வரி விதிப்பு முறை ஏப்ரல் 3-ம் தேதி அமலுக்கு வருகிறது.

டொரண்டோ:

அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த உத்தரவு காரணமாக உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும். ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வருவாய் ஈட்டிக் கொடுக்கும் என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பேசிய அதிபர் டிரம்ப், "இது வளர்ச்சியைத் தூண்டும். நாங்கள் 25 சதவீதம் வரி விதிக்கிறோம்" என தெரிவித்தார். அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள புதிய வரி விதிப்பு முறை ஏப்ரல் 3-ம் தேதி அமலுக்கு வருகிறது.

அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பொருளாதார நிலையற்ற தன்மையை உருவாக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், கனடாவின் புதிய பிரதமரான மார்க் கார்னி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

விரைவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். நிச்சயமாக அடுத்த ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. அதிபர் டிரம்ப் கனடாவின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News