உலகம்

வங்காளதேச பொதுத்தேர்தல்: வாக்களித்தார் பிரதமர் ஷேக் ஹசீனா

Published On 2024-01-07 03:03 GMT   |   Update On 2024-01-07 03:08 GMT
  • அண்டை நாடான வங்காளதேசத்தில் இன்று பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.
  • தேர்தலை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா அறிவித்தார்.

டாக்கா:

அண்டை நாடான வங்காளதேசத்தில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தொடர்ந்து 4-வது முறையாக பிரதமர் ஷேக் ஹசீனா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி நாடுதழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா அறிவித்தார். மேலும், பொதுத்தேர்தல் நடைபெறும் சூழலில் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் செயலி செயலிழந்துள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கிடையே, எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு மற்றும் தேர்தல் செயலி செயலிழப்பு ஆகியவற்றுக்கு இடையே பலத்த பாதுகாப்புடன் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தனது வாக்கை இன்று பதிவுசெய்தார். அப்போது பேசிய அவர், இந்த நாட்டில் ஜனநாயகம் தொடர வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News