உலகம்

உள்நாட்டு கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளி பெண் நீரா தாண்டன் நியமனம்- அமெரிக்க அதிபர் ஜோபைடன் உத்தரவு

Published On 2023-05-06 10:34 GMT   |   Update On 2023-05-06 10:34 GMT
  • வரலாற்றில் மூன்று முக்கிய கொள்கை கவுன்சில்களில் ஏதேனும் ஒன்றை வழி நடத்தும் முதல் ஆசிய-அமெரிக்கர் அவர் ஆவார்.
  • நீரா தாண்டன் பொதுக் கொள்கையில் 25 ஆண்டு அனுபவம் கொண்டவர்.

வாஷிங்டன்:

அமெரிக்காவில் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணான நீரா தாண்டனை அதிபர் ஜோ பைடன் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஜோபைடன் கூறியதாவது:-

பொருளாதார இயக்கம் மற்றும் இனச்சமத்துவம் முதல் சுகாதார பாதுகாப்பு, குடியேற்றம், கல்வி வரை எனது உள்நாட்டுக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்துவதை நீரா தாண்டன் தொடர்ந்து முன்னெடுப்பார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

வரலாற்றில் மூன்று முக்கிய கொள்கை கவுன்சில்களில் ஏதேனும் ஒன்றை வழி நடத்தும் முதல் ஆசிய-அமெரிக்கர் அவர் ஆவார். நீரா தாண்டன் பொதுக் கொள்கையில் 25 ஆண்டு அனுபவம் கொண்டவர். மூன்று அதிபர்களுக்கு சேவை செய்துள்ளார். பராமரிப்பு சட்டத்தின் முக்கிய நபராக இருந்தார். அவரது நுண்ணறிவு எனது நிர்வாகத்துக்கும், அமெரிக்க மக்களுக்கும் நன்றாக சேவை செய்யும் என்பதை நான் அறிவேன்.

நீரா தாண்டனின் புதிய பொறுப்பில் அவருடன் தொடர்ந்து பணியாற்றுவதை எதிர் நோக்குகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நீரா தாண்டன் தற்போது அதிபர் ஜோபைடனின் மூத்த ஆலோசகராகவும், பணியாளர் செயலாளராகவும் உள்ளார்.

Tags:    

Similar News