உலகம்
null

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மீது சுயெல்லா குற்றச்சாட்டு

Published On 2023-11-15 08:48 GMT   |   Update On 2023-11-15 09:02 GMT
  • சுயெல்லா பிராவர்மேன் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் ரிஷி சுனக்குக்கு அனுப்பி வைத்தார்.
  • வாக்குறுதிகளை நிறைவேற்றும் எண்ணம் உங்களுக்கு இல்லை.

லண்டன்:

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நடந்த பேரணியில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 140 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலீசாரின் நடவடிக்கை குறித்து உள்துறை மந்திரியாக இருந்த சுயெல்லா பிராவர்மேன் விமர்சித்தார். இதையடுத்து அவரை மந்திரி பதவியில் இருந்து விலகுமாறு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வற்புறுத்தினார்.

இந்த நிலையில் சுயெல்லா பிராவர்மேன் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் ரிஷி சுனக்குக்கு அனுப்பி வைத்தார். அதில் ரிஷி சுனக் மீது பல்வேறு குற்றச்சாட்டை கூறி அவரை பலவீனமான தலைவர் என்று விமர்சனம் செய்துள்ளார்.

முக்கியமான கொள்கைகளில் நீங்கள் எனக்கு அளித்த உறுதியான உத்தரவாதத்தால் உங்களுக்கு ஆதரவளிக்க ஒப்புக் கொண்டேன். இந்த உத்தரவாதத்தை நிராகரித்தது, நமது உடன் படிக்கைக்கு மட்டும் துரோகம் அல்ல. தேசத்திற்கு நீங்கள் அளித்த வாக்குறுதிக்கு துரோகம் ஆகும்.

வாக்குறுதிகளை நிறைவேற்றும் எண்ணம் உங்களுக்கு இல்லை. கடினமான முடிவுகளை தவிர்ப்பதற்காக உங்களுக்கு விருப்பான சிந்தனையை தேர்ந்தெடுத்துள்ளீர்கள், இந்த பொறுப்பின்மை, நாட்டை சாத்தியமற்ற நிலைக்கு கொண்டு சென்று விட்டது.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News