உலகம்

பாகிஸ்தான் காவல் நிலையத்தில் குண்டுவெடிப்பு- 8 பேர் பலி

Published On 2023-04-25 02:57 IST   |   Update On 2023-04-25 02:57:00 IST
  • உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் காவல்துறை பயங்கரவாத எதிர்ப்பு துணை அதிகாரிகள் என்று ஹயாத் கூறினார்.
  • படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள காவல் நிலையத்தில் (பயங்கரவாத எதிர்ப்பு துறை) நேற்று இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இதில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

அலுவலகத்தில் பழைய வெடி மருந்து இருப்பு இருந்ததாகவும், அது வெடிப்புச் சம்பவங்களுக்குக் காரணமா அல்லது பயங்கரவாதத் தாக்குதலா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக அம்மாகாண காவல்துறைத் தலைவர் அக்தர் ஹயாத் கூறினார்.

மேலும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் காவல்துறை பயங்கரவாத எதிர்ப்பு துணை அதிகாரிகள் என்று ஹயாத் கூறினார்.

படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வெடிவிபத்துக்கான காரணத்தை அறிய போலீசார் மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளும் விசாரணை நடத்தி வருவதாக உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா தெரிவித்தார்.

Tags:    

Similar News