உலகம்

பாகிஸ்தானில் சோகம்: ஆற்றில் படகு கவிழ்ந்து 7 சுற்றுலா பயணிகள் பலி

Published On 2025-06-23 05:42 IST   |   Update On 2025-06-23 05:42:00 IST
  • சுற்றுலா பயணிகள் அங்கு படகு சவாரி மேற்கொண்டனர்.
  • அப்போது திடீரென அந்தப் படகு ஆற்றில் கவிழ்ந்தது.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணம் ஸ்வாட் நகரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. அங்குள்ள ஆற்றில் படகு சவாரி மேற்கொள்வதற்காக தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

அந்தவகையில், சுற்றுலா பயணிகள் அங்கு படகு சவாரி மேற்கொண்டனர். அப்போது திடீரென அந்தப் படகு ஆற்றில் கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்தவர்கள் தண்ணீரில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

தகவலறிந்த மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது தண்ணீரில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது. எனினும் இந்தச் சம்பவத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

மாயமான சுற்றுலா பயணிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, அந்தப் பகுதியில் படகு சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

Tags:    

Similar News