உலகம்

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 6.1-ஆக பதிவு

Published On 2025-06-28 13:34 IST   |   Update On 2025-06-28 13:34:00 IST
  • பொதுமக்கள் வீடுகளை விட்டு அலறியடித்தபடி வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
  • இந்த வாரத்தில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பிலிப்பைன்சின் தெற்கு கடற்கரையில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் டாவோ ஆக்சிடென்டல் மாகாணத்தில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1-ஆக பதிவானது. 101 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், பொதுமக்கள் வீடுகளை விட்டு அலறியடித்தபடி வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரத்தில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 24-ந்தேதி தெற்கு பிலிப்பைன்ஸில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News