உலகம்

55 வயதில் 31-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த நபர்

Published On 2025-05-28 08:14 IST   |   Update On 2025-05-28 08:14:00 IST
  • 55 வயதானகாமி ரீட்டா, நேற்று அதிகாலை 4 மணிக்கு எவரெஸ்ட் உச்சியை அடைந்தார்.
  • 31-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்ததுடன், தனது முந்தைய சாதனையையும் முறியடித்தார்.

காத்மாண்டு:

நேபாள நாட்டின் ஷெர்பா இனத்தை சேர்ந்த பழங்குடியினர் இமயமலையில் வாழும் பழமையான இனக்குழுவாகும். இன்றளவும் இவர்களே எவரெஸ்ட் சிகரம் ஏறும் மலையேற்ற வீரர்களுக்கு வழிகாட்டிகளாக செல்கிறார்கள்.

அப்படி மலையேற்ற வழிகாட்டியான காமி ரீட்டா என்ற நேபாளி, எவரெஸ்ட் மலையேற்றத்தில் 31-வது முறையாக சிகரம் தொட்டு புதிய சாதனை படைத்து இருக்கிறார். 55 வயதான அவர், நேற்று அதிகாலை 4 மணிக்கு எவரெஸ்ட் உச்சியை அடைந்தார். இதன் மூலம் அவர் 31-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்ததுடன், தனது முந்தைய சாதனையையும் முறியடித்தார்.

இந்த முறை அவர், லெப்டினன்ட் கர்னல் மனோஜ் ஜோஷி தலைமையிலான இந்திய ராணுவ சாகசப் பிரிவு வீரர்களை மலையேற்றத்தில் வழிநடத்திச் சென்றார்.

Tags:    

Similar News