உலகம்
பாகிஸ்தான் பலுசிஸ்தானில் பயணிகள் பேருந்து மீது துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி
- கராச்சியில் இருந்து குவெட்டா சென்ற பேருந்து மீது துப்பாக்கிச்சூடு.
- பாதுகாப்புப்படை வீரர்கள் அப்பகுதியை சுற்றி வளைத்து, துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை தேடிவருகின்றனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் பயணிகள் பேருந்து மீது நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் காயம் அடைந்தனர்.
கராச்சியில் இருந்து பலுசிஸ்தான் மாகாணம் தலைநகர் குவெட்டாவுக்கு பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, கலாட் என்ற பகுதியில் வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு எந்த குரூப்பும் பொறுப்பேற்கவில்லை.
சூழ்நிலையை சமாளிக்க பாதுகாப்பு ஏஜென்சிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மீட்பு குழுக்கள் உடனடியாக சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்துள்ளனர். பாதுகாப்புப்படை வீரர்கள் அப்பகுதியை சுற்றி வளைத்து, துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை தேடிவருகின்றனர்.