உலகம்
இந்திய துணை ஜனாதிபதி, செனகல் அதிபா் சந்திப்பு

இந்திய துணை ஜனாதிபதி, செனகல் அதிபா் சந்திப்பு - 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின

Published On 2022-06-03 03:28 IST   |   Update On 2022-06-03 03:28:00 IST
இந்தியா, செனகல் நாடுகளின் 60 ஆண்டுகள் தூதரக உறவை வலுப்படுத்தும் வகையில் துணை ஜனாதிபதி பயணம் அமைந்துள்ளது என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் டுவீட் செய்துள்ளார்.
டக்கர்:

இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அரசுமுறை பயணமாக ஆப்பிரிக்க நாடுகளான காபோன், செனகல் மற்றும் மத்திய கிழக்கு நாடான கத்தாருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

காபோன் நாட்டில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு செனகல் நாட்டின் டக்கர் நகரத்திற்குச் சென்றாா் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு. அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், செனகல் நாட்டின் அதிபா் மேக்கி சாலுடன் அவா் சந்தித்தாா். விவசாயம், சுகாதாரம், பாதுகாப்பு, ரயில்வே, எரிசக்தி, கலாச்சாரம் போன்ற துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. நாளை வரை அங்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறாா்.

இந்தியா, செனகல் இடையே கலாசார பரிமாற்றம், இளைஞர் விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் அதிகாரிகளுக்கு விசா இல்லாத நடைமுறை ஆகிய 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Tags:    

Similar News