உலகம்
விபத்து

100 மீட்டர் ஆழ பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 11 பேர் பலி

Update: 2022-05-16 11:25 GMT
லிமா அருகே பஸ் கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்த பயணிகள், சிகுவாஸ் மாகாண மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
லிமா:

பெரு நாட்டின் லா லிபர்டாட்டில் இருந்து லிமா நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. மலைப்பகுதியில் சென்ற பஸ், திடீரென கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்ததுடன், 100 மீட்டர் (330 அடி) ஆழ பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தது.

லிமாவின் வடக்கே உள்ள அன்காஷ் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் 11 பேர் பலியானர்கள். 34 பேர் படுகாயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த அனைவரும் சிகுவாஸ் மாகாண மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவது, மோசமான சாலைகள், சிக்னல்கள் இல்லாதது மற்றும் அலட்சியம் போன்ற காரணங்களால் பெருவில் சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.
Tags:    

Similar News