உலகம்
நிர்மலா சீதாராமன்

நாட்டின் வளர்ச்சியில் பங்குதாரராக ஆகுங்கள்... புலம்பெயர்ந்த இந்தியர்களிடம் நிதி மந்திரி வலியுறுத்தல்

Published On 2022-04-24 15:06 GMT   |   Update On 2022-04-24 15:27 GMT
அமெரிக்காவில் புலம்பெயர்ந்த இந்தியர்களின் சிறந்த பங்களிப்பை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்தார்.
வாஷிங்டன்:

உலக வங்கி குழு மற்றும் சர்வதேச நாணய நிதிய கூட்டங்களில் பங்கேற்பதற்காக இந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று சிலிக்கான் பள்ளத்தாக்கில் இந்திய சமூகத்தினரிடடையே உரையாற்றினார்.

அப்போது, அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சியில் பங்குதாரர்களாக மாறும்படி புலம்பெயர் இந்தியர்களை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். மேலும், புதுமையான கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சியில் நாட்டு மக்களின் பங்களிப்பை அவர் விளக்கினார். 

இதுதொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அமெரிக்காவில் புலம்பெயர்ந்த இந்தியர்களின் சிறந்த பங்களிப்பை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்தார். குறிப்பாக, கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சியில் அவர்களின் பங்களிப்பு குறித்து பேசினார். மேலும், இந்திய அரசு மேற்கொண்ட கட்டமைப்பு சீர்திருத்தங்கள் பற்றி பேசிய நிதி மந்திரி, அமிர்த காலத்தின்போது இந்தியாவின் வளர்ச்சியில் பங்குதாரர்களாக ஆகுமாறு புலம்பெயர் இந்திய சமூகத்தினரை கேட்டுக்கொண்டார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டிலிருந்து 100 ஆண்டுகள் என்ற நிலைக்கு பயணிக்கும் 25 ஆண்டு காலம் ‘அமிர்த காலம்’ என்று அழைக்கப்படுகிறது.
Tags:    

Similar News