உலகம்
ஜஸ்டின் ட்ரூடோ

ஸ்வீடன், ஃபின்லாந்து நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு ஆதரவு: கனடா பிரதமர்

Published On 2022-04-22 06:59 GMT   |   Update On 2022-04-22 06:59 GMT
இரு நாடுகளும் நேட்டோவில் இணைவதற்கு ரஷியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கனடா தனது ஆதரவினை தெரிவித்துள்ளது.
ஒட்டாவா:

நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து, அந்நாட்டின் மீது ரஷியா படையெடுத்து 56 நாட்களாக போர் செய்து வருகிறது. இதனால் அச்சமடைந்துள்ள ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள்  நேட்டோ ராணுவக் கூட்டணியில் இணையும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

இந்த நடவடிக்கைக்கு ரஷியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கனடா தனது ஆதரவினை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நேட்டோவில் சேருவதற்கு ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து ஆகிய நாடுகள் விருப்பம் காட்டுவதாக உரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. அந்த இரு நாடுகளின் முடிவிற்கும் கனடா நிச்சயமாக தனது ஆதரவை அளிக்கும் என்று கூறினார்.
Tags:    

Similar News