உலகம்
ரஷியா- இந்தியா

இந்தியாவிடமிருந்து மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்ய ரஷியா முடிவு

Published On 2022-04-19 11:56 GMT   |   Update On 2022-04-19 11:56 GMT
இந்த வணிகங்கள் டாலரில் இல்லாமல் ரூபிள் மற்றும் இந்திய ரூபாயில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் 55-வது நாளாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை முற்றுகையிட்டுள்ள ரஷியா பல்வேறு யுக்திகளில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த போரினால் உலக அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக் சாதனங்கள் உள்ளிட்டவற்றை தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் ரஷியா மற்றும் உக்ரைனில் இருந்தே கிடைக்கின்றன. இந்த போரினால் அவற்றின் தயாரிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் ரஷியா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இதனால் ரஷியாவின் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஐரோப்பா மற்றும் சீனாவில் இருந்து மருத்துவ உபகரணங்கள் கொள்முதலும் அந்நாட்டில் குறைந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கு ரஷியா முடிவு செய்துள்ளது.

வரும் ஏப்ரல் 22ம் தேதி நடைபெறவுள்ள இணைய சந்திப்பில் ரஷியா மற்றும் இந்திய மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன. இந்த வணிகங்கள் டாலரில் இல்லாமல் ரூபிள் மற்றும் இந்திய ரூபாயில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News