உலகம்
கைது செய்யப்பட்ட எல் பிட்

200 நாடுகளில் தேடப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மன்னன்- காதலி பதிவிட்ட புகைப்படத்தால் சிக்கினார்

Published On 2022-04-18 10:34 GMT   |   Update On 2022-04-18 10:34 GMT
போதைப்பொருள் கடத்தல் குறித்த ஒரு சந்திப்புக்காக எல் பிட் கொலம்பியா சென்றிருந்தார்.
கலி:

மெக்சிகோவை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் பிட் எனப்படும் பிரையன் டோனாசினோ ஒலுகின் வெர்டுகோ. இவர் 200-க்கும் அதிகமான நாடுகளில் குற்றவாளியாக தேடப்பட்டு வந்தார்.

இவர் தனது காதலியுடன் கொலம்பியாவில் உள்ள கலி என்ற இடத்தில், ஒரு சுற்றுலாத்தளத்தில் புகைப்படம் எடுத்திருந்தார். அந்த புகைப்படத்தை இவரது காதலி ஃபேஸ்புக்கில் பதிவிட, அதைவைத்து இவரது இடத்தை போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்தனர்.

இவர் சமீபத்தில் கொலம்பியாவை சேர்ந்த முன்னாள் போராளி இயக்கத்தை தொடர்புகொண்டு மெக்ஸிகோ மற்றும் அமெரிக்காவிற்கு கப்பல் மூலம் செல்ல இருந்த போதைப்பொருள் குறித்து ஆராய்ந்துள்ளார். இந்த வேலை முடிந்தவுடன் அவர் தன் காதலியுடன் சென்று முத்தம் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை காதலி ஃபேஸ்புக்கில் வெளியிட்டபோது, அதனை வைத்து விசாரணை நடத்திய அதிகாரிகள் எல் பிட்டை இருக்கும் இடத்தை கண்டறிந்து கைது செய்தனர்.
Tags:    

Similar News