உலகம்
நவாஸ் ஷெரீப் வீட்டை முற்றுகையிட்ட இம்ரான்கான் கட்சியினர்

லண்டன் - முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வீட்டை முற்றுகையிட்ட இம்ரான்கான் கட்சியினர்

Update: 2022-04-10 19:35 GMT
பாகிஸ்தானில் சுதந்திர போராட்டம் மீண்டும் தொடங்குகிறது என முன்னாள் பிரதமர் இம்ரான்கான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
லண்டன்:

பாகிஸ்தான் நாட்டின் பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கிடையே, அந்நாட்டு புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவரான ‌ஷாபாஸ் ஷெரீப்பை தேர்வு செய்ய எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இங்கிலாந்தின் லண்டன் நகரில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வீட்டை பாகிஸ்தான் தெஹ்ரிக் இன்சாப் கட்சி தொண்டர்கள் முற்றுகையிட்டனர். அவருக்கு எதிராக கோஷமிட்டனர். 

முற்றுகை போராட்டத்தைட் தொடர்ந்து பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News