உலகம்
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே

இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்- கோத்தபய ராஜபக்சே திட்டவட்ட அறிவிப்பு

Published On 2022-04-06 10:03 GMT   |   Update On 2022-04-06 13:34 GMT
பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இலங்கை பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், அதிபர் பதவி விலகிய பின்னரே பாராளுமன்றம் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய முடியும் என எதிர்க்கட்சியினர் கூறினார்கள்.

இதற்கு பதிலளித்த ஆளும் கட்சியின் பிரதான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ஜனாதிபதிக்கு 69 லட்சம் மக்கள் வாக்களித்துள்ளதாகவும், இதனால் ஜனாதிபதி எந்த வகையிலும் பதவி விலக மாட்டார் எனவும் கூறினார்.

இதனையடுத்து பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, அவையை சிறிது நேரத்திற்கு ஒத்திவைத்தார்.

இதையும் படியுங்கள்.. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி- காற்றழுத்த தாழ்வு பகுதி 9ந் தேதி உருவாகிறது
Tags:    

Similar News