உலகம்
பத்திரிகையாளர் பிரெண்ட் ரீனாட்

உக்ரைன், ரஷியா மோதலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க பத்திரிகையாளர் உயிரிழப்பு

Published On 2022-03-14 04:49 GMT   |   Update On 2022-03-14 07:22 GMT
உக்ரைனில் இருந்து இதுவரை 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, ஹங்கேரி, சுலோவாகியா ஆகியவற்றில் தஞ்சமந்தனர்.
கீவ்:

உக்ரைன் மீது ரஷியா போர் தொடந்து 19-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்தப் போரில் இரு நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்துள்ளனர்.  

ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் தொடர்ந்து ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவின் வடமேற்கு புறநகர் பகுதியான இர்பினில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் பிரெண்ட் ரீனாட் உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார் என தகவல்கள் வெளியானது.

Tags:    

Similar News