உலகம்
ஜோ பைடன்

கொரோனாவை கட்டுப்படுத்த புதிய முயற்சியை கையில் எடுத்த ஜோ பைடன்

Published On 2022-03-03 02:12 GMT   |   Update On 2022-03-03 02:12 GMT
அமெரிக்க மக்கள் தங்களுக்கு அருகிலுள்ள மருந்தகங்களிலேயே கொரோனா பரிசோதனையை எளிமையாக செய்துகொள்ள தேவையான வசதிகளை அரசு ஏற்படுத்தி தந்துள்ளது.
வாஷிங்டன் :

அமெரிக்காவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த `டெஸ்ட் டு ட்ரீட்’ (குணப்படுத்துவதற்காக பரிசோதித்துக்கொள்ளுங்கள்) என்ற பெயரில் புதிய முயற்சியை ஜனாதிபதி ஜோ பைடன் கையில் எடுத்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது இது பற்றிய அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

அதன்படி அமெரிக்க மக்கள் தங்களுக்கு அருகிலுள்ள மருந்தகங்களிலேயே கொரோனா பரிசோதனையை எளிமையாக செய்துகொள்ள தேவையான வசதிகளை அரசு ஏற்படுத்தி தந்துள்ளது. ஒருவேளை அந்த பரிசோதனையில் கொரோனா உறுதியானால், அவர்களுக்கு இலவசமாக கொரோனாவுக்கான ஆன்டி-வைரல் மாத்திரைகளை அளிப்பதற்கான ஏற்பாடுகளையும் அரசு செய்துள்ளது.

இதன் மூலம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்பு 90 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே வேளையில் புதிய வகை கொரோனா வைரஸ்களுக்கு மக்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளார்.
Tags:    

Similar News