உலகம்
அதிபர் விளாடிமிர் புதின்

உக்ரைனின் டுனெட்ஸ், லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக அங்கீகரித்தார் அதிபர் புதின்

Published On 2022-02-22 03:09 IST   |   Update On 2022-02-22 03:09:00 IST
உக்ரைனில் இருந்து ரஷ்யாவுக்குள் நுழைய முயன்ற 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தால் எல்லை முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.
மாஸ்கோ:

ரஷ்யா, உக்ரைன் நாடுகள் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் போர் தொடுக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

உக்ரைன் எல்லையில் சுமார் 1.50 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை ரஷ்யா நிறுத்தி உள்ளதற்கு, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

இதற்கிடையே, உக்ரைனுக்குச் சொந்தமான டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய கிழக்கு மாகாணங்களில் ரஷ்ய ஆதரவு தலைவர்கள் தங்கள் மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீரிக்குமாறு அதிபர் புதினைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர். 

இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரித்தார்.

கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டுனெட்ஸ், லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக அங்கீகரிக்க ரஷியா ஒப்புக்கொண்டுள்ளது. இதன்மூலம் இனி டுனெட்ஸ், லுகன்ஸ் நகரங்கள் பிரச்சினைக்குரிய பகுதியாக இல்லாமல் தனி நகரங்களாக அழைக்கப்பட்டு, அதன் தலைவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

Similar News