உலகம்
மண் சரிவு

கொலம்பியாவில் கனமழை- மண்சரிவில் சிக்கி 14 பேர் பரிதாப பலி

Published On 2022-02-09 03:17 GMT   |   Update On 2022-02-09 03:17 GMT
மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கொலம்பியா நாட்டின் அதிபர் இவான் டியூக் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேற்கு கொலம்பியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியால், பெரேரா நகராட்சிக்கு உட்பட்ட ரிசரால்டா என்ற பகுதியில் நேற்று திடீரென மண்சரிவு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

அங்கு பெரும்பாலான வீடுகள் மரத்தால் செய்யப்பட்டவை என்பதால் 60க்கும் மேற்பட்ட வீடுகள் மண் சரிவில் அடித்து செல்லப்பட்டன. இதில் சிக்கி இதுவரை சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 35 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். மேலும், காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில், பெரேரா நகராட்சியின் மேயர் கார்லோஸ் மாயா, அப்பகுதியில் தொடர்ந்து மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், உயிரிழப்புகளை தவிர்க்க மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

மேலும், கொலம்பியா நாட்டின் அதிபர் இவான் டியூக், மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்.. மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் தெருவில் நடந்த நபர் - ஈரானில் வைரலான வீடியோ
Tags:    

Similar News