செய்திகள்
கோப்புபடம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் கொரோனா ஆபத்து தவிர்க்க முடியாதது - உலக சுகாதார அமைப்பு

Published On 2021-07-22 01:40 GMT   |   Update On 2021-07-22 07:37 GMT
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க முடியாது என, உலக சுகாதார அமைப்பின் டெட்ராஸ் அதனோம் எச்சரித்துள்ளார்.
டோக்கியோ:

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க முடியாது என, உலக சுகாதார அமைப்பின் டெட்ராஸ் அதனோம் எச்சரித்துள்ளார்.  உலக சுகாதார அமைப்பின் டெட்ராஸ் அதனோம் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பு புள்ளி விபரத்தின் மூலம், ஒலிம்பிக் போட்டியில் வைரஸ் பாதிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. வைரஸ் பிரச்னையை முற்றிலும் ஒழிப்பதென்பது முடியாத காரியம். விளையாட்டு வீரர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை விரைவாக அடையாளம் கண்டு, தனிமைப்படுத்த வேண்டும். இதன்மூலம் நோய் பரவலை கட்டுப்படுத்தலாம். 



ஆனால், உலகில் வழங்கப்பட்ட தடுப்பூசியில், 75 சதவீதத்தை, 10 நாடுகள் மட்டுமே பங்கு போட்டுக் கொண்டுள்ளன. உலகின் பல்வேறு பகுதிகளில் தற்போது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனாவின் டெல்டா மாறுபாட்டை விட அதிக பரவல் கொண்டதும், ஆபத்து நிறைந்ததுமான மற்றுமொரு மாறுபாட்டை மனிதகுலம் விரைவில் பார்க்கக்கூடும்” என்றார்.

Tags:    

Similar News