செய்திகள்
போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசும் பாதுகாப்பு படையினர்

மியான்மரில் தொடரும் ராணுவ அடக்குமுறை... 7 பேர் உயிரிழப்பு

Published On 2021-03-03 14:04 GMT   |   Update On 2021-03-03 14:04 GMT
மியான்மரில் கடுமையான அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
நேபிடா:

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மியான்மர் மக்கள் கடந்த 4 வாரங்களாக கடுமையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களை ராணுவம் இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறது. உச்சகட்டமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 18 பேர் கொல்லப்பட்டனர். 30-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். அதுமட்டுமின்றி போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ராணுவம் கைது செய்தது. 

ராணுவத்தின் இத்தகைய அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் மியான்மரில் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. இதில், 7  பேர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

பல்வேறு நாடுகளின் கண்டனங்களையும் மீறி, மியான்மரில் போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவம் குவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News