செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - 6 கோடி பேர் முன்கூட்டியே வாக்களித்தனர்

Published On 2020-10-27 00:39 IST   |   Update On 2020-10-27 00:39:00 IST
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் இதுவரை சுமார் 6 கோடி பேர் முன்கூட்டியே வாக்களித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் வருகிற 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிட, அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் களம் காண்கிறார்.

அமெரிக்காவை பொறுத்தவரையில் தேர்தல் தேதிக்கு முன்பாகவே வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான வசதி உள்ளது. அதன்படி ஒவ்வொரு தேர்தலின் போதும் கோடிக்கணக்கான மக்கள் தேர்தல் நாளுக்கு முன்பே வாக்களித்து விடுவது வழக்கம். கொரோனா பரவல் மற்றும் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதை தவிர்க்கும் பொருட்டு, தேர்தலுக்கு முன்னதாகவே அஞ்சல் மூலமாகவும் மற்றும் வாக்குச்சாவடிக்கு சென்றும் பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர்.

அந்த வகையில் தேர்தலுக்கு சரியாக இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் இதுவரை சுமார் 6 கோடி (5 கோடியே 87 லட்சம்) பேர் முன்கூட்டியே வாக்களித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News