செய்திகள்
கோப்புப்படம்

ஒரே இடத்தில் 6 பேருக்கு மேல் கூடினால் அபராதம் - இங்கிலாந்து அரசு முடிவு

Published On 2020-09-09 17:05 GMT   |   Update On 2020-09-09 17:05 GMT
இங்கிலாந்தில் சமூக நிகழ்ச்சிகள் மற்றும் பொது இடங்களில் 6 பேருக்கு மேல் கூடக்கூடாது, மீறினால் அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
லண்டன்:

இங்கிலாந்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து அதை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய கட்டுப்பாட்டு விதிகளை விதிக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு செய்துள்ளார். வரும் 14-ம் தேதி முதல் இந்த கட்டுப்பாடு அமலுக்கு வரும் என தெரிகிறது.

அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

நண்பர்கள் அல்லது குடும்ப சந்திப்புகளில் 6 பேருக்கு மேல் கூடினால் முதலில் இந்திய மதிப்பில் 9,500 ரூபாயும் அடுத்தடுத்து மீறினால் ரூ 3 லட்சத்து 4 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இதற்கான சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பள்ளிகள், அலுவலகங்கள் கொரோனா பாதுகாப்புடன் நடக்கும் திருமண நிகழ்ச்சிகள், இறுதிச்சடங்குகள் போன்றவற்றிற்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

ஜூலை மாத இறுதியில் இங்கிலாந்தில் கொரோனா தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழே இருந்த நிலையில் கடந்த சில தினங்களாக இரண்டாயிரத்தை கடந்து வருவதால் அரசு இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News