செய்திகள்
சூடான் வெள்ளம்

சூடான்: கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் - 99 பேர் பலி - 3 மாதங்களுக்கு அவசரநிலை பிரகடனம்

Published On 2020-09-05 13:37 GMT   |   Update On 2020-09-05 13:37 GMT
சூடான் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 99 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இயற்கை பேரிடர் காரணமாக அந்நாட்டில் 3 மாதங்களுக்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
கார்டூம்:

வட-கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் சூடானும் ஒன்று. இந்நாட்டில் கடந்த 1 மாதத்திற்கு மேலாக பருவமழை கொட்டித்தீர்த்து வருகிறது. 

இந்த கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் வடக்கு டார்ப்ர், சனர் ஆகிய மாகாணங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. 

வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு வீடுகள், கட்டிடங்கள், சாலைகள் இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த வெள்ளப்பெருக்கு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், சூடானில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களில் சிக்கி இதுவரை 99 பேர் உயிரிழந்துள்ளனர். 46 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும், இந்த வெள்ளம் காரணமாக 1 லட்சம் வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வரலாறு காணத அளவுக்கு ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சூடான் நாட்டில் 3 மாதங்களுக்கு தேசிய அவசர நிலை பிறப்பிக்கப்படுவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News