செய்திகள்
கோப்புபடம்

இத்தாலியில் கொரோனா வைரசுக்கு 100 டாக்டர்கள் பலி

Published On 2020-04-10 08:57 IST   |   Update On 2020-04-10 08:57:00 IST
இத்தாலியில் கொரோனாவுக்கு இதுவரை 100 டாக்டர்கள் பலியானதாக அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்துள்ளது.
ரோம்:

உலக அளவில் கொரோனா வைரசுக்கு அதிகம்பேர் பலியான நாடாக இத்தாலி திகழ்கிறது. இந்நிலையில், இன்னொரு அதிர்ச்சிகரமான தகவலாக, அங்கு கொரோனாவுக்கு இதுவரை 100 டாக்டர்கள் பலியானதாக தெரிய வந்துள்ளது. இவர்களில், ஒரு மாதத்துக்கு முன்பு மீண்டும் வேலையில் சேர்ந்த ஓய்வுபெற்ற டாக்டர்களும் அடங்குவர்.

இதை அந்நாட்டு சுகாதார சங்கம் தெரிவித்துள்ளது. இதுபோல், 30 நர்சுகள் மற்றும் மருத்துவ உதவியாளர்களும் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதம்பேர், மருத்துவ துறையில் பணியாற்றுபவர்கள் என்ற தகவலை மற்றொரு அமைப்பு வெளியிட்டுள்ளது.

Similar News