செய்திகள்
பாப்பாய் பாடி பில்டர், கார்ட்டூன் பாப்பாய்

ஜெல்லியை புஜங்களில் அடைத்து அவஸ்தைப்பட்ட பாப்பாய் பாடிபில்டர்

Published On 2019-11-25 10:04 GMT   |   Update On 2019-11-25 10:04 GMT
ரஷியாவில் கார்ட்டூன் கதாபாத்திரம் ‘பாப்பாய்’ போன்று கைகளை மாற்ற வேண்டும் என புஜங்களுக்குள் ஜெல்லியை அடைத்த முன்னாள் ராணுவ வீரர் அறுவை சிகிச்சை செய்து அதை நீக்கியுள்ளார்.
மாஸ்கோ: 

ரஷியாவை சேர்ந்தவர் கிரில் தெராஷின் (வயது 23). இவர் பிரபல கார்ட்டூன் கதாபாத்திரமான பாப்பாய் போன்று தனது கைகளை மாற்ற  வேண்டும் என புஜங்களுக்குள் பெட்ரோலியம் ஜெல்லியை அடைத்தார். பாப்பாய் என்பது கீரையை சாப்பிடுவதன் மூலம் புஜங்கள்  புஷ்டியாகி அசுர பலம் அடையும் ஒரு கார்ட்டூன் கதாபாத்திரம். ஜெல்லியை அடைத்ததன் மூலம் பாப்பாய் போன்ற கைகளையும் பெற்று  பிரபலமானார் கிரில் தெராஷின்.  

ஆனால் அதன் பின்னர் அவருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றார். கைகள்  இந்த நிலையில் வீங்கியிருந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும், காலம் தாழ்த்தினால் கைகளை வெட்ட வேண்டிய நிலை ஏற்படும் என  அறிவுறுத்தினர். இதையடுத்து அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, செயற்கையாக திணிக்கப்பட்டிருந்த 1.36 கிலோ கிராம் சதை  நீக்கப்பட்டது. 



இயற்கைக்கு மாறாக மனித உடலின் தகவமைப்பை மாற்ற முயன்றால் இது போன்ற விபரீதங்கள் ஏற்படலாம் என மருத்துவர்கள்  அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிகழ்வு குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News