செய்திகள்
பாகிஸ்தானில் எதிர்கட்சியினர் பேரணி

இம்ரான்கான் பதவி விலக வேண்டும் - பாகிஸ்தானில் எதிர்கட்சியினர் பேரணி

Published On 2019-07-26 06:07 GMT   |   Update On 2019-07-26 06:07 GMT
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி விலகக் கோரி அந்நாட்டின் எதிர்கட்சியினர் பல்வேறு இடங்களில் பேரணியாகச் சென்றனர்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான அரசு வெற்றி அடைந்து ஒரு வருடம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில்  பிரதமராக பதவியேற்ற இம்ரான் கான் சரியாக வழிநடத்தவில்லை என எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதையடுத்து சீரழிந்த நிலையிலுள்ள பொருளாதாரத்தை மீட்பதில் இம்ரான் கான் தோல்வி அடைந்துவிட்டதாக குற்றம் சாட்டி எதிர்க்கட்சிகள் நேற்று பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் பேரணியாகச் சென்றனர்.  

பாகிஸ்தானின் பெஷாவர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடைபெற்ற இப்பேரணியில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். இம்ரான் கான் தேர்தலில் வெற்றி அடைந்த தினத்தை கருப்பு தினமாகவும் அவர்கள் அனுசரித்தனர்.

மேலும்,  நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் ராணுவம் உதவியதாகவும் எதிர்க்கட்சிகள் கூறிவந்தன. ஆனால், இதனை பாகிஸ்தான் அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News