செய்திகள்
மாதிரிப்படம்

பறந்துக் கொண்டிருந்த விமானத்தில் இருந்து கார்டனில் விழுந்த சடலம் -அதிர்ச்சி சம்பவம்

Published On 2019-07-02 16:31 IST   |   Update On 2019-07-02 18:08:00 IST
லண்டனில் வானில் பறந்துக் கொண்டிருந்த விமானத்தில் இருந்து திடீரென கார்டனில் சடலம் ஒன்று விழுந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன்:

லண்டனில் உள்ள ஒரு கார்டனில் ஒருவர் வழக்கம் போல காலை வேளையில் சன்பாத் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரே மேலே இருந்து ஏதோ விழுந்துள்ளது.

அதன் அருகில் சென்று என்ன என பார்த்துள்ளார். சிதறிய நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ந்துப் போன அவர் செய்வதறியாது திகைத்துள்ளார். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அருகில் வசித்த மக்கள் அப்பகுதியில் கூடினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரிக்கையில், கென்யா ஏர் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று நெய்ரோபி விமான நிலையத்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை ஹீத்ரோ பகுதிக்குச் சென்றுள்ளது.

அந்த விமானத்தில் இருந்துதான் இந்த சடலம் விழுந்துள்ளது என்பதை கண்டறிந்தனர்.



இச்சம்பவம் குறித்து கென்யா ஏர் விமான நிறுவனம், ‘இறந்த நபர் அனுமதியின்றி லேண்டிங் கியரில் அமர்ந்து வந்துள்ளார். அவரது பை, உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் ஆகியவை லேண்டிங் கியருக்கு அருகில் உள்ளது’ என கூறியுள்ளது.

இந்த அதிர்ச்சியான சம்பவம் குறித்து கார்டனுக்கு அருகில் இருந்தவர்கள் கூறுகையில், ‘கார்டனில் யாரோ தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்றுதான் முதலில் நினைத்தோம்.

கூட்டம் வரவே, அருகே சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் சடலம் கிடந்ததை கண்டு அதிர்ச்சிக்கு உள்ளானோம்’ என கூறியுள்ளார்.





 

Similar News