செய்திகள்

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் கார் குண்டு தாக்குதல் - 4 பேர் உயிரிழப்பு

Published On 2019-05-22 14:41 GMT   |   Update On 2019-05-22 14:41 GMT
சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் இன்று நடத்திய கார் குண்டு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.
மொகடிஷு:

சோமாலியா நாட்டில் அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் மொகடிஷுவில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் இன்று நடத்திய கார் குண்டு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.

முன்னர் பழைய பாராளுமன்றம் இருந்த போந்தேரே மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடி அருகே வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாகவும் ஒரு பெண் ராணுவ அதிகாரி, அவரது பாதுகாவலர் உள்பட 12 பேர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என சோமாலியா ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
Tags:    

Similar News