செய்திகள்

பயங்கரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டம் கொண்டு வருவோம்: ரனில் விக்ரமசிங்கே

Published On 2019-04-30 02:26 GMT   |   Update On 2019-04-30 02:26 GMT
பெரும்பாலான சதிகாரர்கள் கொல்லப்பட்டு விட்டனர் என்றும் பயங்கரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டம் கொண்டு வருவோம் என்றும் இலங்கை குண்டுவெடிப்பு குறித்து அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே அறிக்கை வெளியிட்டுள்ளார். #srilankablasts #RanilWickremesinghe
கொழும்பு :

இலங்கை குண்டுவெடிப்பு குறித்து அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சிறிய அமைப்பாக இருந்தாலும், நன்கு பயிற்சி பெற்ற அமைப்புதான் இலங்கை குண்டுவெடிப்பை நடத்தி உள்ளது. அதனுடன் தொடர்புடைய பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லது கொல்லப்பட்டு விட்டனர். தற்போது, நாடு இயல்புநிலைக்கு திரும்ப தயாராகிவிட்டது. இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அனைவரும் உதவ வேண்டும்.



கிழக்கு மாகாணத்தில், மனித வெடிகுண்டாக தயாராக இருந்தவர்கள், போலீசாரை எதிர்கொண்டபோது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அதற்காக புதிய, கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும். விசா வாங்காமல் இலங்கையில் மத பிரசங்கம் செய்பவர்கள், நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #srilankablasts #RanilWickremesinghe 
Tags:    

Similar News