செய்திகள்

சீனாவில் பாதசாரிகள் மீது காரை ஏற்றி வெறித்தனமான தாக்குதல்- 6 பேர் பலி

Published On 2019-03-22 04:59 GMT   |   Update On 2019-03-22 04:59 GMT
சீனாவில் இன்று காரை ஓட்டி வந்த நபர், சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது காரை மோதச் செய்து நடத்திய திடீர் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். #ChinaAttack #ChinaCarCrash
பீஜிங்:

சீனாவின் ஹூபே மாகாணம் ஜாவ்யாங் நகரில் இன்று அதிகாலை பொதுமக்கள் சாலையோரம் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார், திடீரென பொதுமக்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் பொதுமக்கள் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்தனர். அப்போதும் காரை ஓட்டிய நபர், காரை நிறுத்தவில்லை.

இதையடுத்து போலீசார் அந்த காரை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் காருக்குள் இருந்த நபர் கொல்லப்பட்டார்.  கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். 7 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சீனாவில், தனிப்பட்ட ஆத்திரம் மற்றும் கோபத்தை பொதுமக்கள் மீது காட்டும் போக்கு சமீப ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு நபர் சொகுசு காரை பொதுமக்கள் மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். 43 பேர் காயமடைந்தனர். சில நபர்கள் தங்கள் தனிப்பட்ட ஆத்திரம் மற்றும் மனரீதியிலான அழுத்தங்களால் கத்தி தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.  இவர்கள் குறிப்பாக பள்ளிக்கூடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் சென்று தாக்குதல் நடத்துகின்றனர். #ChinaAttack #ChinaCarCrash
Tags:    

Similar News